Wednesday, July 5, 2017

கோபல்ல கிராமம் - கணையாழி 'சுஜாதா'...

கி.ராஜநாராயணனுடன் பேசுவது போலிருக்கிறது அவரது கோபல்ல கிராமத்தை படிக்கும்போது. அந்த வயசாளிகளும் சம்சாரிகளும் நாயக்கர்களும் நிறைய்ய நெய்யும் பாலும் உண்டு, ஒவ்வொருவரும் உயிர்பெற்று... நடமாடுகிறார்கள். நாவலைப் படிக்கும்போது இதை எழுத முடிந்த சாத்தியமும் என்னை பிரமிக்க வைக்கிறது. ராஜநாராயணனுக்குத் தென் திருநெல்வேலிக் கரிசல் நிலம் அவ்வளவு அத்துப்படியாகத் தெரிந்து இருக்கிறது. நிலத்துடன் அங்கே உள்ள குருவிகள், கால்நடைகள், அந்த நிலத்து ஜனங்கள், அந்த நிலத்து நம்பிக்கையில் Folklore பார்வை, பூர்வீகம், சரித்திரம் எல்லாமே மிகத் திறமையாக எழுதப்பட்டிருக்கின்றன.


கோபல்ல கிராமம் சம்பிரதாய நாவல்களின் வடிவத்தில் இல்லை. இஷ்டப்பட்டபோது சரித்திரம் பேசுகிறது... எங்கேயோ விட்ட கதை எங்கேயோ தொடர்கிறது. சளைக்காமல் ஏறக்குறைய பட்டியல்போல் ஒவ்வொரு நாயக்கரும் அறிமுகம் ஆகிறார்கள். இந்த ஆள் தானய்யா இந்தக் கதையின் நாயகன் என்று சொல்ல முடியவில்லை. சரித்திரம், கர்ண பரம்பரைக்கதை மாட்டு வாகடம், தயிர் தோய்க்கும் முறை, நாட்டு வைத்தியம், வினோத ஜந்துக்களை உண்ணும் முறைகள்... என்று எத்தனையோ சமாச்சாரங்கள் கலந்து இஷ்டப்பட்ட வரிசையில் வந்தாலும் "கோபல்ல கிராமம்" ஒரு மிக அருமையான நாவல் என்று சொல்வேன். காரணம் அதை எழுதியவர் எழுதிய விஷயத்தின் மேல் கொண்டிருக்கும் பற்று, இசை, ஏன் காதல்...


தெலுங்கை தாயமொழியாகக் கொண்டு, துலுக்கர்கள் தொந்தரவினால் தென்னிந்தியாவின் ஆழத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்து இந்தக் கலாச்சாரத்தில் ஒன்றிவிட்டு வீட்டுக்குள் தனிப்பட்ட தெலுங்கு பேசிக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட இனத்தினரின் வசீகரமான கதை இது.

ஓர் எழுத்தாளன், வாசகன் என்கிற இரண்டு தகுதிகளிலிருந்தும் கோபல்ல கிராமத்தை ஒரு பிரமாதமான நாவல் என்கிறேன்.
Ulaganayagan

'கணையாழி' கடைசிப் பக்கம் இதழில் 1977 ம் ஆண்டு எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரை...

Thursday, May 4, 2017

பாஞ்சாலங்குறிச்சி வீர மண்ணில்...

1992 ஜனவரி மாதம். ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஏப்ரல் மாதத்துடன் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிவடையும் தருணம். சிறுவர்களான எங்களுக்கு ஆசிரியர்களை பிரியப்போகிறோம் என்று மனதில் கவலை. இந்த தருணத்தில் பாலசுப்ரமணியன் ஆசிரியர் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறியபொழுது, அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மணிரத்னம் அவர்கள் இயக்கிய "தளபதி" படத்தின் ஆடியோ பாடல்கள் ஒவ்வொரு வீட்டிலுள்ள வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த தருணம். திருச்செந்தூர், கன்னியாகுமரி ஊர்களுக்கு சுற்றுலா செல்வது என்று முடிவாயிற்று. பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ரங்கசாமி, பாலசுப்ரமணியன், ஜெயராமசந்திரன் அவரது மகன் கண்ணன் மாமா ஆகியோருடன் உற்சாகமாக பயணம் கிளம்பியது. விவசாய வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் தந்தையார் உடன் வரவில்லை. சுற்றுலா வேனில் திருநெல்வேலி சாலையில் செல்லும்போது "காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான் " பாடல் ஒலித்தது. திரையரங்குகளில் படம் வெளியாகி 'ஹரிவர்தன் ஹரிவர்தன்' என்ற இடிமுழக்கம் ஒலித்த தருணங்கள்...


சிறுவயதில் பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா செல்வது முதல் அனுபவமாதலால் சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியான தருணங்களோடு பயணித்தது. கன்னியாகுமரி ஊரின் முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் சூரிய பகவானின் உதயத்தோடு பகவதி அம்மனின் தரிசனமும், சுவாமி விவேகானந்தரின் அருளாசியும் தெய்வீக அனுபூதியாக அமைந்தது. உடன் வந்த சிறுவர்கள் அனைவருக்கும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் காணுகையில் எல்லையில்லாத வியப்பு. எனது மனதிலோ தந்தையார் சொன்ன தீர்க்கதரிசனங்களின் திகைப்பு. இது கனவா..? நனவா என ஒரே ஆச்சரியம் கலந்த வியப்பு.

அனைத்தும் இன்பமயமாகக் கழிந்த பின்பு திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க அனைவருடன் வாகனம் கிளம்பியது. கடல் கொஞ்சும் ஆர்ப்பரிக்கும் அலைகளின் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள்வடிவாக வீற்றிருக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும் என்று ஆசிரியர் பாலசுப்ரமணியன் சொல்லக் கேட்டது. முருகப் பெருமானின் தரிசனம், பெற்றோர்களின் திருமணம் சன்னிதி முன்பு நடைபெற்றது என்ற நினைவுகள் மனதில் தோன்றி தெய்வீகத்தை அருளியது. அங்கிருந்து கிளம்புகையில், ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டையை தரிசித்து விட்டு ஊருக்குச் செல்லலாம் என முடிவாயிற்று... 


1974 ம் வருடம் ஆகஸ்ட் 18 ம் நாளன்று, மாண்புமிகு "கலைஞர்" அவர்களால் கட்டபொம்மன் நினைவுக் கோட்டையானது திறப்பு விழா கண்டுள்ளது. இந்த நாளினை தந்தையார் அடிக்கடி நினைவு கூறுவதுண்டு. ஆசிரியர்களுடன் கோட்டையின் உள்ளே சென்று கம்பீரமாக வீரவாளுடன் வீற்றிருக்கும் "கட்டபொம்மன்" சிலையைக் கண்டபோது மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீமந் நாராயணர் வெள்ளைக் குதிரையின் மேல் வீரவாளுடன் விரைந்து வரும் காட்சி மனதில் தோன்றி மறைந்தது. அப்போதெல்லாம் கணிப்பொறி, இணையதளம் ஏது..! ஸ்ரீமத் பாகவதம் நூலில் உள்ள நாராயணரின் புகைப்படத்தை தந்தையார் காட்டியது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை! சிற்றம்பலம் ஏகாம்பரம் என்று சில வாக்கியங்களை தந்தையார் அவ்வப்போது உச்சரிப்பார். மகாபுருஷனின் வீரவாள் வெள்ளையர்களுடன் சமர் புரிந்து போரிட்ட வீரத்தையல்லவா எடுத்தியம்புகிறது. கட்டபொம்மன் நினைத்திருந்தால் பிரிட்டாஷாருடன் இணக்கமாக இணைந்து, வளைந்து கொடுத்து தனது மக்கள் செல்வங்களுடன் ஆடம்பரமாக, அமைதியாக வாழ்ந்திருக்க முடியும்.

"பாஞ்சாலம்" என்ற பூமியில் முயல்கள் தன்னைத் துரத்தி வந்த நாய்களை வீரத்துடன் போரிட்டு துரத்தியதாம். இதைக் கண்ணுற்ற கட்டபொம்மனின் பாட்டனார்கள் அந்த மண்ணின் ஊரை "பாஞ்சாலங்குறிச்சி" என்று பெயரிட்டு அழைத்தார்களாம். நமது ஊரில் ஒரு கைபிடி கரிசல் மண்ணில் 'கொழுக்கட்டை' விளைந்தால் கொழுக்கட்டான் என்ற ஊரின் பேர் மருவி, இந்த பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமையோடு குளக்கட்டாக்குறிச்சி என்று மருவியதாகக் கூறினார். கோட்டையைச் சுற்றி கண்ணுற்று அங்கே தெய்வீகமாக அருள்பாலிக்கும் மக்களின் குலதெய்வமான 'வீரசக்கதேவி' அம்மனை வணங்கி தரிசனம் பெற்றது. ஊரைவிட்டு கிளம்புகையில் மகாபுருஷனின் வீரவாளின் நினைவுகளோடு ஊர் வந்து சேர்ந்தது... இரண்டு நாட்களின் சுற்றுலா எங்கள் அனைவருக்கும் பேரின்பமாக அமைந்தது...

1990 ம் வருடங்களில் பெற்றோர்களுடன் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாநகரில் அமைந்துள்ள "ஸ்ரீரங்கம்" ஆலயத்தில் சந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பெரிய பெருமாளை தரிசனம் செய்தது. ஸ்ரீமந் நாராயணரின் சன்னிதானம் முன்பு கம்பீரமாக அருள்வடிவாக வீற்றிருக்கும் கருடாழ்வாரை சிறுவயதில் காணும்போது, எல்லையில்லாத பிரமிப்பு. அவர்தான் 'கருட' பகவான் என தந்தையார் அறிமுகம் செய்த வேளையில், பூஜைகள் நடைபெற்ற சமயம். அதன்பிறகு தன்னந்தனியாக ஆலயம் சென்று நாராயணரை தரிசனம் செய்தது என தெய்வீகமாக கழிந்த நாட்கள். ஒவ்வொரு முறை ஆலயம் செல்லும்போதும் பிரபஞ்ச ரகசியங்களை உணரும் பாக்கியம் என அமைந்த நாட்கள்...

video

05.05.1950 வெள்ளிக்கிழமை அன்று, ராமசாமி - சோலையம்மாள் என்ற எனது தாத்தா பாட்டிக்கு தந்தையார் "ராமகிருஷ்ணன்" அவர்கள் பிறந்தார். முதலில் பெற்றோர்கள் வைத்த பெயர் ராமகிருஷ்ணசாமி. பள்ளியில் சேர்த்த பிறகு ராமகிருஷ்ணன் என ஆகியது. ஊரிலும் வீட்டிலும் கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி என அழைத்தார்கள். பெற்றோர்கள் என்னை செல்லமாக குமாரு குமாரு என்று அழைப்பார்கள். இதே தினத்தில் அகில உலகம் போற்றும் சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' அவர்கள், டுவிட்டர் சமூக வலைதளத்த்தில் இணைந்து கோடான கோடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்... இந்த வருடத்தின் 05.05.2017  வெள்ளிக்கிழமை தந்தையார் அவர்களின் 67 வது பிறந்த தினமாகும்..!


ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!

Friday, April 28, 2017

ரெண்டமூழம் திரைக்காவியம் - பீமஷேனனாக 'புலிமுருகன்' மோகன்லால்..

"ரெண்டமூழம்" திரைப்படத்தில் நடிப்பது குறித்து தனது முகநூலில் அளித்த நேர்காணல்...

video

வியப்பூட்டும் கதைகளை தந்தையார் சொல்லிய வண்ணம் கழிந்த பால்யகால நாட்கள் அவ்வப்போது மனதை தொட்டுச் செல்வதுண்டு. பிறந்து தவழ்ந்த ஊரில் ஆர்வமுள்ள இலக்கியவாதிகள் எவரையும் காண்பது அரிது என்னும் பட்சத்தில், நாம் கூறும் கதைகளை மற்றவர்கள் நின்று கேட்பதற்கு பிரயத்தனப்பட வேண்டும். இப்படியாக நான் கூறவரும் அற்புதங்களை, கதைகளை எவரும் காது கொடுத்து கேட்காததால் உன்னிடம் மனம் திறந்து கூறுகிறேன் என்று தந்தையார் அடிக்கடி கூறுவார். ஏனெனில், சக்திக்கு அப்பாற்பட்ட கதைகளை கேட்கவோ அதை ஊகித்து பரிசீலனை செய்யவோ நாமும் நிறைய படித்திருந்தால் மட்டுமே முடியும் என்று பிரஞ்சு எழுத்தாளர் "வால்டேர்" கூறுவதுண்டு.


முதலில் வியப்புற மனதில் தோன்றும் கதைகள் நாளடைவில் காலச் சக்கரங்களின் சுழற்சியில் பிரபஞ்சமே நம்மை ஒரு 'பாற்கடல்' வாசத்தின் அருகாமையை உணரச் செய்கையில் எல்லையில்லாத ஆற்றல் நம்மை ஆட்கொள்வதுண்டு. காலங்களின் ஓட்டங்கள் பிரபஞ்சத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்பது அறிஞர்களால் மட்டுமே உணரக்கூடிய சங்கதியாக இருப்பது வியப்பான ஒன்றுதான். இந்த அறிஞர் பெருமக்கள் அசைக்க முடியாத மனவலிமையோடு, இன்ன காலங்களில் இவை இவை நடக்கும் என அனுமானித்து அத்தகைய ரகசியங்களை துருவித் துருவி தேடிய வண்ணம் உள்ளனர்.  

சிரஞ்சீவி மனிதர் "வியாசர்" அருட்கொடையாக மனிதகுலத்திற்கு அளித்த மகாபாரத இதிகாசம் நூற்றாண்டுகளினூடே மனித மனங்களில் பல்வேறு வடிவங்களில் பரிணமித்து வந்துள்ளது. கூத்துக் கலைகள், நிகழ்த்து கலைகள், நாடகம், சினிமா என்ற ஊடங்கங்களின் மூலம் கோடான கோடி மக்களின் மனதில் பாரத இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் அழியா வண்ணம் நிலை பெற்றுள்ளன.


மலையாள இலக்கிய உலகின் வாழும் சகாப்தம் எம் டி வாசுதேவன் நாயர் எழுதிய "ரெண்டமூழம்" மகாபாரதக் கதை குந்தி தேவியின் இரண்டாவது புதல்வன் பீமனின் பார்வையில் விரியக்கூடியது. முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட ஒரு சுருக்கமான காவியத்தை சொல்லக்கூடியது. இந்தக் கதையை மையமாகக் கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் பல்வேறு மொழிகளில் திரைப்படமாக உருவாக உள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எம்டி வாசுதேவன்நாயர் கதை - திரைக்கதை எழுத பீமசேனனாக "புலிமுருகன்" மோகன்லால் நடிக்க உள்ளது, உலகெங்கிலும் உள்ள கோடான கோடி ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
Superstarrajini.tumblr.com

ஓம் நமசிவாய!

Monday, March 20, 2017

காவிரி நதிக்கரை தீரத்தில் பள்ளி கொண்டுள்ள 'அரங்கநாதர்'...

உலகைக் காக்கும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பள்ளி கொண்டுள்ள "பெரிய பெருமாள்"..

video

திருச்சி மாநகரில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள "மச்ச அவதாரம்" ஸ்தலம். பத்து தலை ராவணனின் சகோதரரான 'விபீஷணன்' ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டார். வைபோகமாக விழா முடிந்த பிறகு தனது நாடான இலங்கை நகருக்குச் செல்ல விடை பெறுகையில் அவர் போற்றி வணங்கும் அரங்கநாதரின் திருவுருவச் சிலையை தனக்கு தந்து அருளுமாறு வேண்டுகையில், இஷ்வாகு குலத்தோன்றலான ஸ்ரீராமபிரான் மனமுவந்து தந்து அருளினார். அதன் பின்னர் தெய்வீக ஆற்றல் வாய்ந்த அரங்கநாதர் காவிரி நதிக்கரையில் பள்ளிகொண்டது தல வரலாறாகும்.

இத்திருத்தலத்திற்கு அருகேயுள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் சாபவிமோசனம் நீங்க தவமிருந்த சந்திர பகவானுக்கு பெரிய பெருமாள் சாபவிமோசனம் அளித்தார். இந்த தீர்த்தத்தில் சந்திரனுடன் மகாலட்சுமியும் உடன் பிறந்தார். ஒவ்வொரு யுகங்களிலும் தர்மங்கள் நிலைகுலைந்து அதர்மங்கள் தலை விரித்தாடும் போதெல்லாம் நல்லோர்கள், பக்தர்களைக் காக்க தனது உயர்ந்த நிலையிலிருந்து கீழிறங்கி அவதாரம் எடுக்கிறார்...

அரங்கநாதரின் உத்தரவுக்காக காத்திருக்கும் 'கருடாழ்வார்' பெரிய பெருமாளின் வலது கரத்தை தனது புஜங்களின் மீது தங்கியுள்ளார்..!

ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!

Friday, December 9, 2016

தனிமையின் 3000 ஆண்டுகள்

12.12.2016 திங்கள்கிழமை சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்' அவர்களின் 66 வது வருட பிறந்த தினமாகும். 05.05.2016 எனது தந்தையார் ரா ராமகிருஷ்ணன் அவர்களின் 66 வது வருட பிறந்த தினமாகும்.

2000 ம் வருடங்களில் தந்தையாரிடம் ஓய்வு நேரங்களில் நல்ல நூல்களை படிக்கச் சொல்வேன். விருப்பமில்லை என்பார். மனது அதை நோக்கி செல்லவில்லை என்பார். மனம் வேறு எதையோ தேடுகிறது என்பார். சிற்சில காரணங்களைச் சொல்லி சமாளிப்பார். 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'காடு' புதினத்தை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு படித்தது. மனதில் ஒரு வகையான பாதிப்புகளை உருவாக்கியது. நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற பழங்குடி மக்களைப் பற்றி யாருமே அறிந்திராத வியக்க வைக்கும் தகவல்களை அவ்வப்போது தந்தையார் கூறுவார். இவருடைய நினைவாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். சிறுவயது முதல் எண்ணிலடங்கா வியப்பூட்டும் விசயங்களை சொல்லியபோது எளிதில் நம்பியது கிடையாது. காலங்கள் செல்ல செல்ல சமூக வலைதளங்களின் பயன்பாடும், உலகின் மீதான ஆதிக்கம் அதிகமாகியபோது, தந்தையார் அவர்கள் கூறிய பல தீர்க்கதரிசனங்கள் கண்முன்னே காட்சியாக விரிந்தது. மனதை வியப்பில் ஆழ்த்தியது. 

video

இதன்பிறகு எண்ணற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 'மகாபாரதம்' நூல்களை தீவிரமாக வாசிக்கக்கூடிய ஆவலை ஏற்படுத்தியது. தந்தையாரின் நினைவுகளோடு அவிழ்க்கப்படாத பல ரகசியங்கள் பிரபஞ்சத்தில் புதையுண்டு உள்ளது. காலச் சக்கரங்களின் துணையோடு சரியான காலகட்டங்களில் மாபெரும் ரகசியங்கள் பிரபஞ்சத்தில் வெளிப்படும் என்ற அசாத்திய தன்னம்பிக்கையோடு நாட்கள் உருண்டோடுகிறது...  

Friday, November 11, 2016

நேமிநாதர் சமணர் கோவில் - சிங்கிகுளம் பகவதி அம்மன் ஆலயம் - 07.11.2015சமண மதத்தின் 22 வது தீர்த்தங்கரர் 'நேமிநாதர்' பள்ளி கொண்டுள்ள கோவில்.
பெருமான் நம்பி தமிழ் பல்லவரையன் கருவறையும், பகவதி அம்மன் சந்நிதானமும் ஆலயத்தில் தெய்வீக அருளோடு காட்சியளிக்கிறது!

SuperStarRajini

ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!


         Jainism enjoyed royal patronage during initial centuries of Christian era. After Bhakti movement by Shaiva Nayanars and Vaishnav Azhvars Jainism thrived in some part of Tamilnadu and it lost imperial patronage in some area of Tamilnadu especially in Chola region. In that crucial time Jainism faced a quiver of appropriation and conversion of their pallis(schools), Shrines, monasteries and Lords by Shaivites and Vaishnavites. We get some examples of such appropriation and conversion in modern Tamilnadu after paleographic evidences came into light by Archaeologist, Historians and Scholars.

     Singikulam is situated in near Nanguneri town in Tirunelvelli of modern Tamilnadu state. This place is situated about 13 kms from Nanguneri in North direction and About 25 kms from Trrunelvelli in south west direction. On the hillock near singikulam village a hindu shrine named as Bhagwathi temple is situated. The hill contains several hollows in boulders to draw water from natural springs .An inscription from this Bhagwathi temple’s wall came into light which attests this ancient temple as a Jain monastery named as “Nyayparipalap perumpalli”. The temple had been appropriated by local Hindus.

          The inscription inscribed in the 15th year of Mara Sundara Pandya II (1253-54 AD) records information about the exemption from taxes on lands purchased and endowment for the shrine constructed by “Matisagara Adibhatta” as Karanmai pallichandam. Pallichandam is provided for worship of Jina Lord celebrated as “Enakkunalla –Nayakar" in the pantheon on the hill at Tidiyur. The hill was also known as "Jinagirimamalai" which means great mountain of Jina. The Lord named as "Enakkunalla –Nayakar" has meaning "My supreme Lord". The Lord was named after the officer "Oruvar Unarundan Enakkunallaperumal" alias "Tamilppallavariyan".

        The Bhagwati temple on the hill was formerly a Jain monastery and the fact is established by paleographic evidences as well as Jina sculptures in the inner shrine of temple. Lord Jina's sculpture is being worshiped as Gautam rishi situated in inner shrine. Moreover one Jina sculpture is carved as bas relief near the water tank in the shrine. At the foot of the hill A Jina sculpture is installed in which is in meditation posture. This Jina sculpture is worshipped as Rishi Bhrigu and covered with linen clothe.


என்னுடைய தந்தையர் ராமகிருஷ்ணன் அவர்கள், தாத்தா ராமசாமி அவர்களுடன் 1968 ம் வருடங்களில் சிங்கிகுளத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அப்போதைய காலகட்டங்களில் இந்த மலையில் சமணர் பள்ளி நடைபெற்றது தெரியாது. 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றிய தொ பரமசிவன் அவர்கள், இந்தக் கோவிலின் பின்புறமுள்ள கல்வெட்டின் செதுக்கப்பட்டுள்ள வரலாறை ஆய்வு செய்து சமண மதத்த்தின் 22 வது தீர்த்தங்கரர் 'நேமிநாதர்' ஸ்தாபனம் செய்த சமணர் பள்ளி என்பதை கண்டுபிடுத்து, 'விடுபூக்கள்' என்ற நூலில் 2012 ம் ஆண்டு பிரசுரம் செய்தார். நான் இந்த நூலை கோவை மாநகரில் நகர்மண்டபம் நூலகத்தில் நவம்பர் 2015 மாதத்தில் வாசித்து அறிந்து கொண்டேன். 

எனது வாழ்நாளில் 24 வருடங்கள் தேடியலைந்த சமணர் ஆலயத்தை நவம்பர் 07, 2015 நாளன்று சென்று தமிழ் பல்லவரையன் சந்நிதி, பகவதி அம்மன் சந்நிதியையும் மனமுருக வணங்கியபோது, எல்லையில்லாத மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. அன்றைய தினம் உலகநாயகன் 'கமல்ஹாசன்' அவர்களின் பிறந்த நாளாக அமைந்தது நான் செய்த பெரும் பாக்கியம்!


ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!
அனைத்து புகைப்படங்களையும் பார்க்க Click Here

Thursday, November 3, 2016

'விசாரணை' திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு தேர்வானது!

video

வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் உருவான 'விசாரணை' திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு தேர்வானது. படத்தின் கதாசிரியர் ஆட்டோசந்திரன், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி போன்றோர் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்..


Thursday, September 29, 2016

பசுமையின் காதலன் யோகநாதன்

இந்திய நாட்டின் 'பசுமை போராளி' விருது பெற்ற கோவை யோகநாதன் அவர்களுடன்! துணை ஜனாதிபதி 'ஹாமீத் அன்சாரி' அவர்களிடம் 2008 ம் வருடங்களில் விருதினை பெற்றார்..
#Ecowarrior 


Sunday, September 11, 2016

பேரா இளங்கோவன் - நேர்காணல்..

பேராசிரியர் இளங்கோவன் அவர்களின் நேர்காணல் - 25.12.2012 
கிருஸ்துமஸ் தினம்! 

சிவன் கோவில் 
நேருநகர், கோவை மாநகரம்..


video

Saturday, September 10, 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - டுவிட்டர் சமூக வலைதளம்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்தார் - 05.05.2014 - திங்கள் கிழமை!


video

05.05.1950 வெள்ளிக் கிழமையன்று எனது தந்தையார் 
ரா ராமகிருஷ்ணன் அவர்கள், குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் ராமசாமி - சோலையம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.

உடன் பிறந்தவர்கள்..

*நாராயணசாமி 
*கோப்பம்மாள் 
*ஜானகி அம்மாள் 

இவர்களில் நாராயணசாமி அவர்கள் சிறுவயதிலேயே காலமானார்.


சிவபெருமானின்  அற்புதங்கள் :

ஒருமுறை கற்புள்ள கிருபியின் சிறப்பை நாரதர் சிவபெருமானிடம் சொல்ல அதைச் சோதிக்க விரும்பிய சிவன், அடியார் கோலத்தில் கிருபியிடம் சென்று நிர்வாணியாக வந்து தன்னை உபசரிக்க வேண்டும் என்று வேண்டி நிற்க, சிவனடியாரின் விபரீத ஆசை கண்டு ஒரு கணம் திகைத்த கிருபி அடியார்கள் மனம் நோகாமல் அவர்கள் விருப்பத்தை அனுசரித்து நடக்க வேண்டும் என்ற தன் கணவர் தனக்கிட்ட கட்டளையை மீறாதிருப்பதே தனது கற்புடைமைக்குச் சிறப்பு எனக் கருதி, அடியாரை அழைத்துப் பாத பூஜைகள் செய்து ஆசனமிட்டு அமர வைத்து ஆசிரமத்தில் சென்று தன் ஆடைகளைக் களைந்து தனது நீண்ட அடர்த்தியான கூந்தலால் அவயங்களை மறைத்துக் கொண்டு அடியார் கோலத்தில் வந்த சிவனுக்கு அவர் விருப்பம்போல் அன்னமிட்டு உபசரிக்க, அப்போது நிருவாணியாக நின்ற கிருபியைக் கண்ட சிவனுக்கு வீரியம் வெளிப்பட்டு அவள் படைத்த அன்னத்தில் விழுந்தவுடன் சிவன் மறைந்து விடுகிறார். அப்போது அங்கு வரும் துரோணர் கிருபியின் மூலம் இதையறிந்து தன் ஞானதிருஷ்டியால் அடியார் கோலத்தில் வந்து சென்றது சிவபெருமான் என்று அறிந்து அன்னத்தில் விழுந்த அவர் வீரியம் வீண் போகக்கூடாது என்று கிருபியிடம் நீயே அந்த அன்னத்தை புசித்து விடு என்று கட்டளையிட்டுச் சென்றார்...

அசுவத்தாமன் பிறந்தார்..

வீரியம் விழுந்த அந்த அன்னத்தைப் புசிக்க மனமில்லாத கிருபி அதை அருகில் இருந்த குதிரைக்குக் கொடுக்க சிவனுடைய அந்த வீரியம் குதிரையிடமிருந்து புத்திரனாக ஜனித்தது. அந்தப் புத்திரன் பிறந்தவுடனே உச்சைச்ரவஸ் என்னும் தேவலோகக் குதிரையைப்போல் கணைத்தான். அதைக் கேட்டு ஆகாயத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் இவனுடைய உரத்த சத்தம் குதிரையின் சத்தம்போல் திக்குகள் தோறும் பரவியதால் இவன் அஸ்வத்தாமா என்ற பெயரோடிருப்பான் என்று சொல்லிற்று!

நாடகநாடி சி கரிகாலன் எழுதிய 'துரோணர்' நாடகத்தின் நூலிலிருந்து!

ஓம் நமசிவாய!
ஓம் நமோ  நாராயணா!


06.09.2014 நாளன்று, ரஸ்யா நாட்டிலுள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் வகையில் இன்னிசை கீதம் முழங்குகிறார்கள். மத நல்லிணக்கத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு!

video


Sunday, July 10, 2016

நினைவுகள்


30 வருஷத்துக்கு முன்னாடி ஊரு ஜனங்களோட வாழ்க்கை காட்டு வேலை, வீட்டு வேலைன்னு முடியும். பொழுதும் சாய்ஞ்சிரும். இன்னைக்கு காலம் மாறியிருக்குது. அதனால ஊருல இருந்த மக்களோட வாழக்கை முறை மாறியிருக்குது. ஊரோட திருவிழாவுல எல்லா ஜனங்களையும்🔱 பாக்கலாம்.. என்னோட வாழ்க்கையும் காடு, வீடு, வாசல்னு 50 வருஷத்தைக் கடந்துருச்சி குமாரு...

அம்மா மல்லிகா...

Wednesday, June 29, 2016

சாமி ஆடுறப்ப சாமி தெரியுதா..?


சாமி! நீங்க நம்ம ஊரு கோயில் திருவிழா நடக்குறப்ப வருஷம் வருஷம் சாமி ஆடுறீங்க. கையில சூழாயுதம் வச்சிகிட்டு ஜல் ஜல்னு மணியடிக்க நடந்து வர்றீங்க. கையில உள்ள சாட்டையால உடம்புல அடிச்சி அம்மனை வரவேற்குறீங்க. இந்த நேரத்துல உங்களால அம்மனோட நிஜமான உருவத்தை பாக்க முடியுதா..?
ஆமாம் சாமி.. அந்த காளியாத்தாவை எத்தனை வருஷமா பாத்துகிட்டு வர்றேன். பாக்கப்போயிதான் சாமியாடுறேன்..
முத்தாலம்மன் கோயில் பக்கம் சாமியாடி வரும்போது எந்த சாமியாவது பேசுதா..? அங்க சாமியாடி வர்றப்ப திக்கு பிரமை பிடிச்ச மாதிரி இருக்கும்.. ரத்தக் கலருல கையில சக்கரமும், சூழாயுதமும் வச்சிருக்கிற பகவானே கண்ணுக்குத் தெரியுவாரு. ஒரு நிமிஷத்துல மறைஞ்சிவாரு.. முட்டையை வீசும்போது ருத்ரதாண்டவம்
ஆடுவாரு. கருப்பசாமியோ, அய்யனாரோ அவரு இல்லை. அவரு குதிரை மேல உக்காந்து சூழாயுதத்தோட வர்ற மாதிரி தெரியும் சாமி...
உங்க கண்ணுல சாமி தெரியுறதை நானு பாத்துருக்கேன்...
ஓம் நமச்சிவாய!
fb.com/LockupWar